யாழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த 12 வயது மாணவன்

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலைய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் Brahalathanan Janukshan வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டிகள் ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால் June 17-22ம் திகதி வரை மாலைதீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

9 சுற்றுக்களை கொண்ட இச் சுற்றுப் போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு Draw உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன் Janukshan மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இச் சுற்றுப்போட்டியில் இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு, கஸகஸ்தான், கிர்கிஸ்ரான், உஷ்பெஸ்கிஸ்தான் நாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இச் சுற்றுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த கௌத்தம் கிருஷ்ணா பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.