இலங்கையை மீட்க களமிறங்கும் தமிழர்

இந்தியாவின் பிரதம பொருளாதார ஆலோசகரும், மதுரைத் தமிழருமான வி.ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு இன்று இலங்கை வரவுள்ளது.

விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வரவுள்ள குறித்த குழுவினர், மேலதிக பொருளாதார உதவிகளை மேற்கொள்வதற்காக இங்குள்ள நிலைமைகளை மதிப்பிடவுள்ளனர்.

மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு இலங்கைத் தூதுவரை சந்தித்து பேசியிருந்தனர்.

இதன் விளைவாகவே இப்பயணம் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.