பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதிய தகவல்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதிய அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் வைத்து இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் தெரிவித்தார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.