15 வயது மாணவியை சீரழித்த ஒரு பிள்ளையின் தந்தை

பொகவந்தலாவை – கெம்பியன் தோட்டப் பகுதியில் 15 வயதான மாணவியொருவரை கர்ப்பமாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) கைதுசெய்யப்பட்ட இச்சந்தேகநபர் நாவலப்பிட்டி- தொலஸ்பாகை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் மனைவி பொகவந்தலாவை – கெம்பியன் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், மனைவியின் வீட்டுக்கு வந்த போதே, சந்தேக நபரால் மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி ஆறு மாத கர்ப்பிணி என்றும், அவரது நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த குடும்பல நல உத்தியோகத்தர் ஒருவர், மாணவியை பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்த போதே, மாணவி கர்ப்பம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொகவந்தலாவை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.