அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களது வெளிநாட்டு வேலைக்கான விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஓய்வூதியம் பாதிக்காத வகையில் அதிகபட்சமாக 5 வருட விடுமுறையானது அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு தகவல் தொழிநுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் மொழி அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொழிற் பயிற்சியை முடிக்க அதிகபட்சம் ஒரு வருட விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் அரச ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட குடியுரிமை இல்லாதோர் கணக்கு மூலம் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.