உங்களது நிறைவேறாத ஆசையும் விரைவில் நிறைவேற, இந்த 2 பொருள் மட்டும் போதுமே!

எல்லாரும் பல ஆசைகளை மனதில் தேக்கி வைத்திருப்போம். அதில் சில விஷயங்கள் நடந்து விடும். பல விஷயங்கள் நடக்காமல் போய் விடும். என்னடா இது எவ்வளவு ஆசையாக இருக்கிறோம்? ஏன் நடக்க மாட்டேன் என்கிறது? நியாயமான ஆசை தானே? நாம் என்ன பேரசையா பட்டுவிட்டோம் என்று தோன்றும். உங்களுடைய நியாயமான ஆசைகள், கனவுகள் விரைவில் நடக்க இந்த எளிய மேஜிக்கல் டிரிக் ஒன்றை செய்து பார்க்கலாம். மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. பல நூற்றாண்டுகள் கடந்த பண்டைய காலத்தில் இந்த முறையை பயன்படுத்தி தங்களது எண்ணங்களை நிறைவேற்றி வந்துள்ளனர். அதை இந்த காலத்தில், மாற்றி எப்படி செய்வது என்று இப்பதிவில் இனி காணலாம் வாருங்கள்.

நீங்கள் மனதில் நினைக்கும் விஷயங்களை முதலில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது. அப்படி பகிர்ந்து கொள்வதன் மூலம் சில விஷயங்கள் நடக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உங்களது ஆழ் மன எண்ணங்களை இந்த பிரபஞ்ச சக்தி நிறைவேற்ற விடாது. அது சிறிய ஆசைகளாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய ஆசைகளாக இருந்தாலும் சரி உங்கள் ஆசைகள் நிறைவேறும் வரையில் அதனை உங்களுக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பழம்பெரும் காலத்தில் இந்த பரிகாரத்தை அன்றைய நாகரிக வளர்ச்சியின் மூலம் வித்தியாசமாக கையாண்டு பலன் பெற்றனர். இன்று இருக்கும் சூழ்நிலையில் நாம் அதனை செய்வது சாத்தியம் கிடையாது. அதை மிகச் சுலபமாக வேறு ஒரு முறையில் நம்மால் செய்ய முடியும். முதலில் காற்றுப்புகாத ஒரு பெட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய பெட்டியே போதுமானது. இரும்பு, தகரம், பித்தளை எந்த உலோகத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்பெட்டியில் இரண்டே இரண்டு பொருட்களை வைத்து நம்மால் நாம் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். இதற்கு தேவையான முதல் பொருள் அருகம்புல். விநாயகருக்கு உகந்த இந்த அருகம்புல்லை உங்கள் கைகளாலேயே கைப்பிடி அளவு கிள்ளி எடுத்துக்கொண்டு வரவேண்டும். இதை நீங்கள் தான் செய்ய வேண்டும். மற்றவர்களை செய்ய அனுமதிக்கக்கூடாது. அருகம்புல் கிடைப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லையே. எனவே உங்கள் கைகளாலேயே ஒரு கைப்பிடி எடுத்து அந்த பெட்டியில் போட்டுக் கொள்ளவும்.

இதனுடன் இரண்டாவது பொருளாக நீங்கள் சேர்க்க போவது, தெய்வீக பொருளான மஞ்சள். அருகம்புல்லுடன் மஞ்சள் தூளை சிறிதளவு போட்டுக்கொள்ளுங்கள். மஞ்சளை தூளாக தான் போடவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களும் அப்பெட்டியில் சேர்த்ததும். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற, உங்கள் ஆசைகளை இந்த காகிதத்தில் எழுதுங்கள். குறிப்பிட்ட ஒரே ஒரு ஆசையை மட்டுமே நீங்கள் எழுத வேண்டும். உங்களுக்கு இருக்கும் அனைத்து ஆசைகளையும் எழுதினால் பலன் கிடைக்காது. முக்கியமான ஒரு ஆசையை மட்டும் எழுதுங்கள். அதை ஆறு பாகங்களாக மடித்துக் கொள்ளவும். மடித்து வைத்த இந்த காகிதத்தை அந்த பெட்டியில் சேர்க்கவும். இப்போது நன்றாக காற்றுப்புகாத படி மூடி உங்கள் பூஜை அறையில் வைக்கவும். நீங்கள் எழுதி வைத்த ஆசை நிறைவேறும் வரை, இந்த பெட்டியை நீங்கள் திறந்து பார்க்கக் கூடாது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் கூடாது. இவற்றை முறையாக நீங்கள் செய்வதன் மூலம் விரைவான பலன்களை கண்கூடாக காண்பீர்கள்.