கொழும்பில் பதற்ற நிலைமை – பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

கொழும்பு பிளவர் வீதியில் பொலிஸாரால் போடப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தாய்மாரின் போராட்டம் என்ற கருப்பொருளில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு பிளவர் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.