இலங்கைக்கு பெருமை சேர்த்த முல்லை மங்கைகள்!! குவியும் வாழ்த்துமழை

இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற முல்லைத்தீவு மாணவி நிதர்சனாவுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த நிதர்சனா என்ற மாணவி இந்தியாவில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கும் தான் பிறந்த தமிழ் மண்ணுக்கும் நிதர்சனா பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் மே 2ஆம் திகதி அன்று நடைபெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்பு கலை போட்டியில் தங்கம் வென்ற மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதா நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று மாலை மாங்குளத்தில் பெரும் கௌரவிப்பு இடம்பெற்றிருந்தது.

மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மாங்குளம் சந்தி வரை வீதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விஜிதா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .

பாராட்டு நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கழக வீரர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.