வித்தியாசமான முறையில் எரிபொருள் பவுசரை வரவேற்ற யாழ் மக்கள்

யாழ் – நெல்லியடிக்கு இன்று சென்ற எரிபொருள் பவுசரை தேங்காய் உடைத்து, வித்தியாசமான முறையில் மக்கள் வரவேற்றுள்ளனர்.

எரிபொருள் பெற்றுக்கொள்ள இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்த நிலையில், எரிபொருள் பவுசர் பல மணிநேரம் வரவில்லை.

நீண்ட நேரத்தின் பின் எரிபொருள் நிரப்பு நிலைத்திற்கு எரிபொருள் பவுசர் வந்த மகிழ்ச்சியில் மக்கள் தேங்காய் உடைத்து கொண்டாடியுள்ளனர்.

நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று(21) எரிபொருளுக்காக நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் மக்கள் காத்திருந்துள்ளனர்.

இதேவேளை, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட எரிபொருள் அட்டை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு 3000 ரூபாவிற்கும், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவிற்கும் பெட்ரோல் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் கரவெட்டி பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பெட்ரோல் வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தும் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.