யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் உயிரிழப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்(20) உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டு இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பால் வட்டுக்கோட்டைப் பிரதேசம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.