கழிவறைக்குள் PinkBox – யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னுதாரண செயல்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி – அறிவியல்நகர் வளாகத்தில் மாணவிகள் பயன்படுத்தும் வகையில் அணையாடைகள் (Sanitary Napkins) பெற்றுக்கொள்ளும் நடைமுறை பரீட்சார்த்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வீவசாயபீட மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாட்டில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலைத்தேய நாடுகளில் PinkBox என அறியப்படும் குறித்த நடைமுறை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பான முன்னுதாரணமாகும்.

இவ்வாறான ஏற்பாடுகள் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் மேற்கொள்ளப்படுவது சிறப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.