பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொவிட் தொற்றுக் காலத்தில் இருந்த நிலைமையில் இருந்து இன்றைய நிலைமை வேறுபட்டுள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு செப்டெம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேலதிக நிகழ்ச்சிகள் உட்பட மீட்டல் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.

இது ஒருபுறமிருக்க இவ்வார இறுதிக்குள் எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்குத் தீர்க்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.