எரிபொருள் கப்பல்கள் எப்போது இலங்கை வரும்?

எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் (23) பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளது.

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பெட்ரோலை கொள்வனவு செய்வதற்க்காக மக்களை வரிசைகளில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளுக்காக மக்கள் பல நாட்களாக வரிசைகளில் காத்திருந்தபடி உள்ளனர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.