ரிஷபத்தில் புதன் சஞ்சாரம் செய்வதால் பண நெருக்கடியைச் சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? உங்க ராசி இதில இருக்கா?

மிதுனம்

மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்குச் செலவு, நஷ்டம் ஏற்படலாம். அதே சமயம் வெளிநாடு தொடர்பான ஆதாயம், ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். புதிய தொழில், வியாபாரம் தொடங்குவதைத் தவிர்க்கவும். அவசியமெனில் நல்ல ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

மன அழுத்தம் தரக்கூடிய சில விஷயங்கள் நடக்கும். நிதி விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தி, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்கு 12 மற்றும் 9ம் வீட்டு அதிபதியான புதன் பகவான் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கையில் சில திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.

குடும்ப உறுப்பினர்களுடன், உங்கள் துணையுடன் தவறான புரிதல் ஏற்படலாம்.பெரியவர்களுடன் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்கு 7 மற்றும் 10ம் வீட்டு அதிபதியான புதன் பகவான், ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். புதன் பகவானின் இந்த சஞ்சாரத்தில் நீங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

நோய் எதிர்ப்புச்ச் சக்தி தரக்கூடிய பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளவும்.

சில ஆரோக்கிய குறைப்பாடு காரணமாக செலவு அதிகரிக்கக்கூடும். காதல் விவகாரங்களில் ஏமாற்றத்தைச்ச் சந்திக்க வேண்டியிருக்கும்.

படிப்பில் கூடுதல் கவனம், நேரத்தை செலவிட்டுப்ப் படிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகள் வரலாம் என்பதால், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.