இன்றைய மின்துண்டிப்பு நேர விபரம்

இன்று(21) 2 மணித்தியலங்களும் 30 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மற்றும் கொழும்பு முன்னுரிமை வலையங்களில் காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தபட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.