உண்மைகளை போட்டுடைத்த கோட்டா

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வைத்து செய்த தவறு மீண்டும் சரி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடனான சந்திப்பின் போது இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்பிற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடாளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க தனக்கு அதிகாரம் உள்ளதாகவும், குழப்பம் அடையாமல் பொதுஜன பெரமுனவை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவிடம் கோரியுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் 69 மில்லியன் மக்களின் ஆதரரவு கொண்ட பொதுஜன பெரமுன கட்சியில் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு பதிலாக வேறு ஒரு கட்சியை சேர்ந்தவரை பிரதமரை நியமித்தமைக்கு வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கூறினர்.

இதற்க பதிலளித்த ஜனாதிபதி, நீங்கள் விடுக்கும் கோரிக்கையை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவை விருப்பதுடன் பதவி நீக்கம் செய்யவில்லை. எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்.

அது வரை பொறுமையான செயற்பட்டு, எந்த ஒரு தேர்தலையும் பெறக் கூடிய வகையில் பொதுஜன பெரமுனவை கிராமிய மட்டத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.