3 நாட்களுக்கு எரிபொருள் கிடையாது..!!! அரசாங்கம் கைவிரிப்பு

அடுத்துவரும் 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனியார் பயணிகள் பேருந்துகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு இன்று முதல் 24 மணிநேரமும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருளை வழங்குமாறும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.