தங்கத்திற்கும் உங்களுக்கும் ராசியே இல்லையா? இந்த 2 முறையை பின்பற்றிப் பாருங்கள்!

சில பேரோட ராசியானது, கையில் காசில்லை என்றால் கூட, அவர்களுக்கு தங்கம் தானாக சேரும். எப்படி என்று கேட்கிறீர்களா? சூரியனின் பலமும், குருவின் பலமும் எவர் ஒருவர் ஜாதகத்தில் சரியாக இருக்கின்றதோ அவர்களுக்கு மேலும் மேலும் தங்கம் சேரும் யோகம் வரும் என்று சொல்கிறது ஜோதிடம். தங்கம் வாங்கும் யோகம் இல்லாதவர்களுக்கும், தங்கம் வாங்கும் யோகம் வர வேண்டும் என்றால், எந்த நாளில் தங்கம் வாங்க வேண்டும்? ‘இதுவரைக்கும் இந்த நாள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!’ வீட்டில் இருக்கும் தங்கத்தை வைத்து என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குறிப்பாக வியாழக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை அன்றும் வரும் பூசம் நட்சத்திரத்தில் தங்கம் வாங்குவது மிகவும் சிறப்பானது. அட்சய த்ரிதியை போன்றே, இன்னொரு தினமும் உள்ளது. அந்த தினத்தில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் அது என்ன தினம் என்பதை இறுதியாக பார்த்துவிடலாம். உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சின்ன அளவு குண்டுமணி தங்கமாக இருந்தாலும், பரவாயில்லை. அதை வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, அந்த தங்கத்திற்கு சிறிதளவு மஞ்சள் வைத்து, நன்றாக காய்ந்ததும் மஞ்சள் துணியில் கட்டி முடிந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தொடர்ந்து தங்கம் சேர வேண்டும் என்பதையும் மகாலட்சுமியிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

அந்த தங்கம் உங்களுடைய பூஜை அறையிலேயே இருக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவறில்லை. ஆனால், ஒரு பொட்டு தங்கத்தில் எப்போதுமே மஞ்சள் சேர்ந்திருப்பது நம்முடைய வீட்டிற்கு நல்லது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு பொட்டு தங்கமானது, எப்போதும் உங்கள் பூஜை அறையில் இருப்பது போல் பார்த்துக் கொண்டால், நல்ல பலனை நமக்கு பெற்றுத்தரும்.

நீங்கள் அந்தத் தங்கத்தை அம்பாள் கோவிலில் உண்டியலில் சேர்க்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் என்றால் இன்னும் சிறப்பானது. தங்கத்தை அம்பாளுக்கு தானமாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டால் வீட்டில் தங்கம் குறைவில்லாமல் சேரும் என்பதும் ஐதீகம். சில பேர் அம்மனுக்கு, தாலி செய்வதற்கு தங்கத்தை தானமாக கொடுப்பார்கள். அதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? அப்படித்தான் இதுவும். இது ஒரு பரிகாரம்.

அடுத்ததாக, ரவிபுஷ்ய யோகத்தில் தங்கத்தை வாங்கினால் தங்கம் மேலும் மேலும் சேரும் என்பது யாரும் அறியாத ஒரு விஷயம். அட்சய திதி என்பது எல்லோரும் அறிந்ததாக இருக்கும்பட்சத்தில், அந்த தினத்தில் நாம் தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்கின்றோம். அட்சய திதிக்கு நிகரான, இந்த ரவிபுஷ்ய யோகா தினத்தில் தங்கம் வாங்கினால் இன்னும் மேலும் மேலும் சேரும் என்பது நாம் எல்லோராலும் அறியப்படாத ஒன்று. சரி. இந்த ரவிபுஷ்ய தினம் என்றைக்கு வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றிலிருந்து தினம்தோறும் ஒரு 100 ரூபாய் எடுத்து வைத்தால் கூட இந்த ரவிபுஷ்ய யோக தினத்தில் ஒரு குண்டுமணி அளவு தங்கத்தை நம்மால் வாங்க முடியும். இந்த வருடம் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.20 மணி வரை ரவிபுஷ்ய யோகம் வருகிறது. இந்த தினத்தை யாரும் தவறவிடாதீர்கள். ஒரே ஒரு முறை இந்த நேரத்தில் ஒரு குண்டுமணி தங்கத்தை வாங்கி, உங்கள் வீட்டில் வைத்துப் பாருங்கள். கட்டாயம் தங்கம் மேலும் மேலும் சேரும் என்பதும், வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு குறைவிருக்காது என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.