பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தீர்மானம்

இன்று(19) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேரத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி இன்றையதினம் ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு நேர விபரம் வருமாறு,

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.