நடமாடும் எரிபொருள் நிரப்பு திட்டமா…!! – வைரலாகும் மற்றுமொரு வீடியோ

பெண்ணொருவருக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசரிலிருந்து இரகசியமாக எரிபொருள் வழங்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

காரொன்றில் வந்த பெண் ஒருவருக்கே தனிப்பட்ட முறையில், வீதியில் வைத்து எரிபொருள் பவுசரிலிருந்து குறித்த எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறித்த பெண்ணுக்கு எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற பவுசரில் இருந்தே 2 கொள்கலனில் எரிபொருள் எடுத்து வழங்கப்பட்டுள்ளமை காணொளியில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் காரொன்றில் வந்த பெண்ணுக்கு வீதியில் வைத்து எரிபொருள் பவுசரிலிருந்து எரிபொருள் எடுத்து வழங்கப்பட்ட மற்றுமொரு சம்பவமும் நேற்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை ஏற்பட்டுள்ள நிலையில், அதிகாரம் படைத்தவர்களுக்கு இவ்வாறு சலுகைககள் கிடைக்கப்பெறுவதாக மக்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.