அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்

இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்ட எரிபொருள் விநியோகப் பட்டியலை தமது இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நீக்கியுள்ளது.

அத்தோடு, எரிபொருள் இருப்பை சரிபார்க்க ICTA (Fuel.Gov.lk) உருவாக்கப்பட்ட சிறப்பு இணையத்தளமும் நீக்கப்பட்டுள்ளது.

இதனால், அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களின் காரணமாகவே இந்த நடவடிக்கை தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் தற்போது மிக நீளமான டீசல் மற்றும் பெற்ரோலுக்கான எரிபொருள் வரிசையை அனுபவித்து வருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக தற்போது எரிபொருள் விநியோகத்திற்காக 30 வீதமான எரிபொருள் பவுசர்களே பயன்படுத்தப்படுவதாக பெற்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.