கரண்ட் அடுப்பு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சிகர தகவல்

மின்சார அடுப்பு மூலம் சமையல் செய்து வந்த மக்களின் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின்சார அடுப்பினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமக்கு நிவாரணம் ஒன்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசேடமாக கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.

எரிவாயு, மண்ணெண்ணெய், விறகு கிடைக்காததால், மின்சாரம் மூலம் வீடுகளில் சமைத்து, குழந்தைகளுக்கு உணவளித்ததாக பல அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சார அடுப்பு கொள்வனவு செய்து ஒரு மாதத்திற்குள் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், மேலும் சிலருக்கு அதனையும் விட அதிகரித்துள்ளதாகவும் தாம் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் எரிவாயுவுக்கு பதிலாக விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாததால், மின்சார அடுப்பு சமையலுக்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.