சூரியன் சஞ்சார மாற்றம்!! எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

சூரிய பகவான் ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு ஜூன் 15ஆம் திகதி பெயர்ச்சி ஆகியுள்ளார். சூரியனின் இந்த மாற்றம் 12 ராசியினரின் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் தரக்கூடியது என ஜோதிடம் கூறுகிறது.

நவகிரகங்களின் தலைவனான சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் சஞ்சாரம் செய்யக்கூடியவர். இவர் எந்த ராசியில் சஞ்சரிக்கின்றாரோ, அந்த ராசி அதிபதி நட்பு கிரகமா, அவரின் பார்வை பலன் என பல விஷயங்களைப் பொறுத்து பலன்களைத் தரக்கூடியவர்.

அந்த வகையில் புதன் பகவான் அதிபதியாக இருக்கும் மிதுன ராசியில் சூரியனின் சஞ்சாரம் செய்ய உள்ள ஆனி மாதத்தில் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்


மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவானுக்கு சூரியன் நட்பு கிரகமாக இருந்தாலும், அவர் செல்லக்கூடிய மிதுன ராசியை ஆளும் புதன் பகவானுடன் பகை என்பதால், உங்கள் இயல்பு வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருக்கவும்.

உடன்பிறந்தவர்களுடன் சில மன கசப்பான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. தொழில் ரீதியாக சில விஷயங்கள் சாதகமற்றதாக அமையலாம். வணிகத்தில் கடின உழைப்பு தேவைப்படும். பணியிட அரசியலில் ஈடுபடாமல், ஒதுங்கி இருக்கவும்.

​ரிஷபம்


ரிஷப ராசிக்கு குடும்ப, தன ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வீட்டில், சில காரணங்களுக்காக ஒருவருக்கொருவர் வெறுப்பு ஏற்படலாம். எனவே, வீட்டில் உள்ளவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, யோகா – தியானம் செய்வது நல்லது.

எந்த விஷயத்தையும் கவனமாக செய்வதும், பேச்சில் கனிவு இருப்பது நல்லது. கடினமான பேச்சை விட கடினமான உழைப்பு தேவை.

​கடகம்


கடக ராசிக்கு 12ஆம் வீடான விரய ஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் பெரியளவில் நற்பலன்களைத் தராது. உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய நோய்கள் உங்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யலாம். அதனால் இந்த மாதத்தில் உங்களின் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் உங்களின் பெற்றோர் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. நீதிமன்ற வழக்கு சார்ந்த சிந்தனை மேலோங்கும். மனக்குழப்பம் உருவாகலாம்.

​விருச்சிகம்


விருச்சிக ராசிக்கு சூரியன் மிதுனத்தில் சஞ்சரிப்பதால் சில நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியது இருக்கும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காடுவது நல்லது. குறிப்பாக உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு எலும்பு அல்லது வயிறு தொடர்பான சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

பெரிய தொகையை பரிவர்த்தனை செய்யும் போது உங்களைச் சுற்றி நம்பிக்கையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளவும். அவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளவும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் மோசமான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ள நேரிடும். அதே நேரத்தில் உங்களுக்கு சில பண வரவுக்கான வாய்ப்புகளும் உண்டு.

​தனுசு


தனுசு ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய மாதம். சில விஷயங்களில் உங்கள் மனைவியுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்ப விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கூட்டு வியாபாரம் செய்பவர்கள், தங்களின் கூட்டாளிகளுடன் சில சந்தேகங்கள் ஏற்படும். அதனால் எதையும் பேசித் தீர்ப்பதோடு, வெளிப்படையான செயல்பாடு அவசியம். காதல் தொடர்பான விஷயங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும்.

மகரம்


மகர ராசிக்கு இந்த மாதத்தில் சற்றுக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களின் உழைப்பை சிலர் திருட நேரிடும். சோம்பேறித்தனத்தை தவிர்ப்பது அவசியம். அதனால் சில வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

போட்டியாளர்கள், எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தன்னம்பிக்கையோடு உழைத்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இந்த மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

​மீனம்


மீன ராசிக்கு குடும்ப வாழ்க்கையில் சில சவால்களைச் சந்திக்க நேரிடும். வீடு, மனை தொடர்பான சில சர்ச்சைகள் ஏற்படலாம். சில விஷயங்களில் புரிதல் இல்லாமல் செயற்படுவீர்கள்.

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏற்கனவே பாதிப்பு கொடுத்திருந்த சில உடல் பிரச்சினைகள் மீண்டும் தொந்தரவு தரலாம். சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.