ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு அதிகாலையில் நேர்ந்த அவலம்

திருகோணமலை ஹபரன பிரதான வீதியில் வான் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று(18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டகளப்புக்குச் சென்ற வான் ஒன்றும் திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.