அரச ஊழியர்களின் வேலை மற்றும் கல்வி நடவடிக்கை தொடர்பில் புதிய நடைமுறை

எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் அரச பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றால் இதற்கான பிரத்தியேக சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2 வாரங்களுக்கு அரச சேவையாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை, இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள், மருத்துவம், எரிபொருள் விநியோகம், உணவுப்பொருள் விநியோகம் உட்பட்ட அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.