பட்டுப்போன ரோஜா செடிகளை, ஒரே வாரத்தில் துளிர வைத்து, ஒரே மாதத்தில் பூ பூக்க வைத்துவிடலாம்! இந்த 2 பொருள் மட்டுமே போதும்…!

ஆசை ஆசையாக இந்த வண்ணத்தில் ரோஜா பூ பூத்தால் மிகவும் அழகாக இருக்கும் என்று எண்ணி, வீட்டில் வாங்கி வைத்திருக்கும் அந்த பூச்செடியானது பட்டு போக்கிவிட்டது. இலைகள் எல்லாம் உதிர்ந்து காய்ந்து விட்டதா? மீதமுள்ள ஒரு கிளை இருந்தாலும் போதும் உங்களது செடியை சுலபமாக துளிர வைத்து விடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முதலில் உங்கள் வீட்டு ரோஜா செடிகளில், இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால், மற்ற ரோஜாச்செடியிடமிருந்து அந்த செடியை தள்ளி வைத்து விடுங்கள். ஏனென்றால், இந்த பிரச்சனை மற்ற செடிகளுக்கும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. செடியில் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்பது நமக்கு ஆரம்ப காலத்திலேயே தெரிந்திருக்கும். ஆனால், அதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டு இருப்போம். இப்படிப்பட்ட பூச்சிகள் அரிக்கும் போது ஆரம்ப காலத்திலேயே, அந்த கிளியை வெட்டிவிட்டிருந்தோமேயானால், பிரச்சனை பெரிதாக ஆவதற்கு வாய்ப்பு இல்லை. அதை வெட்டாமல் விடும் பட்சத்தில், செடி முழுவதும் அந்த பூச்சிகள் அறிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு கிளையை வெட்ட கஷ்டப்பட்டோமேயானால் மொத்த செடியையும் இழக்க நேரிடும்.

ஆரம்ப காலத்திலேயே நீங்கள் இதை கவனித்து, அந்தக் கிளையை வெட்டி விட்டு அந்தக் கிளையின் முனையில் லேசாக வேப்ப எண்ணெயையும், மஞ்சளையும் தடவி விட்டு விட்டால் போதும். அதன் பின்பு அந்த இடத்தில் முளைக்கின்ற கிளைகள் பூச்சு இல்லாமல் வளர ஆரம்பிக்கும். வேப்ப எண்ணெயை கிளையின் முனையில் தடவும் போது, உஷாராக தடவ வேண்டும். வேப்ப எண்ணையின் ஒரு சொட்டுகூட மண்ணில் படக் கூடாது. இதோடு சேர்த்து நர்சரி ஷாப்பில் கிடைக்கும் வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு தூளையும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வேப்பம் புண்ணாக்கை ஒரு பங்கு எடுத்துக் கொண்டால், இரண்டு மடங்கு கடலை புண்ணாக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது 100 கிராம் அளவு வேப்பம் புண்ணாக்கு எடுத்துக்கொண்டால், 200 கிராம் அளவு கடலை புண்ணாக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு 1 லிட்டர் தண்ணீரையும் சேர்த்து, 12 மணிநேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்பு இந்த தண்ணீரை நேரடியாக செடியில் ஊற்றி விடாதீர்கள். ஒரு குளியல் பக்கெட்டில் பாதி அளவு தண்ணீருடன், இந்தக் கலவையை நன்றாக கரைத்து அதன்பின் ஒரு டம்ளர் அளவு எல்லா செடிகளுக்கும் ஊற்றினாலே போதுமானது.

மாதத்திற்கு இரண்டு முறை இப்படி செய்ய வேண்டும். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பாக, இந்த தண்ணீரை ஊற்றவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எந்த தண்ணீரை, ஊற்றுவதற்கு முன்பு ஒரு முறை மண்ணை நன்றாக கிளறி விட்டு, பின்பு ஊட்டச்சத்து தண்ணீரை ஊற்றினால், ஊட்டச்சத்து விறைவாக செடியின் வேரை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊட்டச்சத்து தண்ணீரை காலை வேளையில் ஒரு முறை மாலை வேளையில் ஒரு முறை ஊற்ற வேண்டும். அதன் பின்பு ஒரு மணி நேரம் கழித்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இப்படி செய்து பாருங்கள்! பட்டுப்போன செடி நன்றாக துளிர்த்து அதில் கொத்துக் கொத்தாக பூக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ரோஜா செடிக்கு மட்டுமல்ல. எந்தச் செடிக்கு வேண்டுமென்றாலும் இந்த முறையை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். அந்த செடி செழிப்பாக வளரும்.