ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, ஆசிரியர்களை அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு இன்று (17) அறிவித்துள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.