‘யாழ். இந்துவின்’ பழைய மாணவர்களது முன்மாதிரியான செயல்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் குறித்த பாடசாலையின் உணவகம் ஆரோக்கிய உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 06 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலையின் உணவகம் ஆரோக்கிய உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

இலைக்கஞ்சி , கடலை, பால், கீரை வடை, குரக்கன் ரொட்டி, பழரசம், போன்ற ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இவ்வுணவகத்தினை யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் நிர்வகிக்கின்றனர்.