கிரகப்பெயர்சியால் எந்த ராசிக்கு என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதில உங்க ராசி இருக்கா?

ரிஷபம் :

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார்.இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. நல்ல வாய்ப்பு வீடு தேடி வரும். திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம்.

மிதுனம் :

மிதுனத்திற்கு புதன் ராசி அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதி. மீன ராசிக்கு 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரரான புதன் 10வது இடத்தில் அமர்கிறார். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான இடமாகும்.சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருமணம் பேசி முடிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.

கடகம் :

கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா் புதன். புதன் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடிய அம்சமாகும். வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும்.பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் கிடைக்கும். பூா்வீக சொத்தில் பிரச்னைகள் தலைதூக்கும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை ஏற்படும் முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும்.பிரச்சினைகளை சமாளிக்க புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணிந்து பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.

சிம்மம் :

சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் 8வது இடத்தில் அமர்கிறார். திடீா் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். கணவரை கூட்டுக்கொண்டு கடை வீதிக்கு சென்று பர்ஸை காலி செய்யுங்கள் அந்த அளவிற்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகளின் சாதனை பெருமைப்பட வைக்கும்.வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள் நன்மைகள் நடைபெறும்.