என் அன்புக் குழந்தாய்…-இது உங்கள் ஷீரடி சாயி பாபா..வாங்க பாபா அருள் பெறுவோம்

என் அன்புக் குழந்தாய்…இன்று உன் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள்… நாம் எடுத்துவைத்திருக்கும் அடி சரிதானா இல்லையா என்று குழம்பிக் கொண்டிருக்கின்றாய்.

யோசனைக்கு மேல் யோசனை.நீ என்னதான் யோசனை செய்தாலும் உன் காரியம் சிதறாமல் இருக்க எனதருள் வேண்டுமல்லவா.அதனால், உன் யோசனைகளை எல்லாம் விட்டுவிட்டு காரியங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இரு.

சரியான நேரத்தில் எப்படி முடிக்க வேண்டுமோஅப்படி எந்த குறைவுமில்லாமல் முடித்துக் கொடுக்கின்றேன்.உன் யோசனைகளுக்கெல்லாம் மேம்பட்டவன் ஒருவன் நான் இருக்கிறேன் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படு. அப்போது உன் காரியங்களெல்லாம் எவ்வித தடையுமின்றி நிறைவேறுவதை அனுபவத்தில் உணர்வாய்…

-ஷீரடி சாயி பாபா