அரச துறையினருக்காக வெளிவந்த புதிய சுற்றறிக்கை

வெள்ளிக்கிழமைகளில், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரசதுறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன.

நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சுற்றறிக்கை ஏற்புடையதாகாது.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களை, குறித்த தினத்தில் வீட்டுத்தோட்டம் அல்லது குறுகிய கால உணவுப் பயிர் உற்பத்தியில் ஈடுபட ஊக்குவித்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையை காண இந்த இணைப்பை அழுத்துங்கள்,