வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபட்டால் இந்த விஷயங்களை செய்யக்கூடாதாம்..கஷ்டங்கள் அதிகரிக்குமாம்

சரியான இடத்தில் வைக்கவும்

சிவலிங்கத்தை வீட்டில் தொடர்ந்து வழிபட முடியாத இடத்தில் வைக்காதீர்கள். அதோடு சிவலிங்கம் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். முக்கியமாக சிவன் வைக்கும் இடமானது வசதியாக அமர்ந்து சிவனை வழிபடும் வகையில் இருக்க வேண்டும்.

மஞ்சள் கூடாது

என்ன தான் மஞ்சள் பெண்களின் அழகை அதிகரிக்கும் ஓர் அழகுப் பொருளாகவும், மருத்துவ குணம் நிறைந்த பொருளாக இருந்தாலும், சிவனுக்கு மஞ்சளை படைக்ககூடாது என்பது தெரியுமா? எனவே தெரியாமல் கூட சிவலிங்கத்தின் மேல் மஞ்சளை தடவாதீர்கள்.

குங்குமம் கூடாது

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்ய விரும்புபவர்கள், குங்குமத்தை மறந்தும் லிங்கத்தின் மீது தடவாதீர்கள். ஏனெனில் ஒரு பெண்ணின் கோரிக்கைகளில் கணவனின் நீண்ட ஆயுளுடன் குங்குமமும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. சிவன் ஒரு அழிக்கும் கடவுள். எனவே சிவலிங்கத்தின் மீது ஒருபோதும் குங்குமத்தை பூசக்கூடாது.

தங்கம், வெள்ளி

வீட்டில் வைக்கப்படும் சிவலிங்கம் எப்போதும் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் இருக்க வேண்டும். சிவலிங்கத்தின் மீது பானையில் இருந்து விழுதும் நீர்த்துளிகள் தொடர்ந்து லிங்கத்தின் மீது கொட்ட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

துளசி இலைகள்

துளசி இலைகளை சிவலிங்கத்திற்கு படைக்கக்கூடாது. வேண்டுமானால் வில்வ இலைகளைக் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்யலாம். அதுமட்டுமின்றி, தினமும் அதிகாலையில் எழுந்து குளித்த பிறகு சிவலிங்கத்திற்கு சந்தனம் இட வேண்டும்.

தேங்காய் நீர்

சிவலிங்கத்தின் மீது தேங்காயை நீரால் அபிஷேகம் செய்யக்கூடாது. ஆனால் தேங்காயை படைக்கலாம். அதேப்போல் தாழம் பூ, சம்பங்கி அல்லது செண்பக பூக்களைக் கொண்டு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்யக்கூடாது. ஏனெனில் இந்த பூக்கள் சிவபெருமானால் சபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.