எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த 55 வயது நபர் உயிரிழப்பு

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை – வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

அவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.