இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என முன்னாள் பிரதி நீதி அமைச்சரும் முன்னாள் மனிதவள தலைவருமான கெளரவ வீ.புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்;

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு செய்து அதிர்ச்சியை தருகிறது. இவரது இழப்பானது மலையக மக்களுக்கு பேரிழப்பாகும்.இதில் அவரைப்பற்றி நான் ஒரு முக்கிய விடயம் சொல்லவேண்டும்.”மிகச் சிறந்த தொழிலாளர் பற்றிய ஆழுமையைக் கொண்டவர். அதே சந்தர்ப்பத்தில் அவர் ஆரம்பத்தில் இருந்து பல சேவைகளை செய்திருக்கின்றார் அதை கணக்கிலிடமுடியாது. அந்த அளவில் சேவை இருக்கின்றது, பல அபிவிருத்திகளை முன்னின்று செய்திருக்கின்றார். நான் என்றுமே அவரை விமர்சித்தது கிடையாது. அதற்கு முக்கிய காரணம் அவர் மக்களுக்கு வழங்கும் விருந்தோம்பலை எவராலும் மறக்க முடியாது, அதில் அவரது பழக்கம் அவ்வாறானது.

இவருடன் சேர்ந்து நான் இலங்கை தொழிலாளர் காங்ரஸில் சேவையாற்றி இருக்கின்றேன், எந்த ஒரு பேச்சுவார்த்தையாக இருந்தாலும் கூட அவர் தொழிலாளர்களை விட்டுக்கொடுத்தது கிடையாது, அதுதான் உண்மை. எப்போதுமே அவரின் தொழிலாளர்களுக்கு ஆதரவான கருத்தை மிக ஆணித்தனமாக வெளிப்படுத்துவார்.இவர் சர்தேச தொழிற்சங்களின் பங்குவகிக்கும் முக்கிய தொழிற்சங்கமாக இருப்பதால், இவரின் இழப்பு மிக பெரிய இழப்பாக இருக்கின்றது, இது பெரும் மன வேதனையையும் அளிக்கின்றது.மலையக மக்கள் கட்சி பேதமன்றி துயரில் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தனது அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.