கனடா செல்ல காத்திருப்போருக்கு எச்சரிக்கை தகவ‌ல்

இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் பின்வரும் இணையத்தளத்தின் ஊடாகவே குடியேற்றத்திற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிவரவு மோசடிகள் குறித்தும் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனேடிய உயர் ஸ்தானிகராலயம், வட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளங்களிலும் விசாக்களை செயற்படுத்துவதில்லை என்று கூறியது.

மேலும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் விசாக்களுக்காக பணத்தைப் பெறுவதில்லை என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.