மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இரா.சம்பந்தன் நேரில் அஞ்சலி.!!

மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நேரில் சென்று தற்போது அஞ்சலி செலுத்தியுள்ளார்.கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளதுடன் அவரது குடும்பத்தினரிடம் தனது அநுதாபங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.