யாழ் – கொடிகாமத்தில் விபத்து!! உயிரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை

கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலைய இலக்கமான 0262050222 அழைப்பெடுத்து தெரிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

விபத்து தொடர்பில் கொடிகாம்ம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்