இந்த விஷயங்களை புதன்கிழமைகளில் செய்தால் கையில் பணம் அதிகரிக்குமாம் ..வாங்க என்னவென்று பார்க்கலாம்

அருகம்புல்லை கொடுங்கள்

விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிடிக்கும். விநாயகரை மகிழ்விக்க வேண்டுமானால், அவருக்கு பிடித்த அருகம்புல்லை வாங்கி கொடுங்கள். விநாயகருக்கு அருகம்புல்லை வழங்கி அர்ச்சனை செய்யும் பக்தர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். எனவே தினமும் விநாயகருக்கு அருகம்புல்லை கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் உங்கள் வேலையில் உள்ள தடைகளை விநாயகர் நிச்சயம் நீக்குவார்.

குங்குமத்தை பூசுங்கள்

விநாயக பெருமானை மகிழ்விக்க, புதன்கிழமைகளில் மறவாமல் அவருக்கு குங்குமத்தை பூசுங்கள். விநாயகருக்கு குங்குமத்தை பூசினால், அவர் மகிழ்ந்து, நல்ல ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்குவார். விநாயகருக்கு குங்குமத்தை பூசிய பின்னர், நீங்களும் உங்கள் நெற்றியில் குங்குமத்தை பூசிக் கொள்ளுங்கள். இப்படி தினமும் கூட செய்யலாம்.

வன்னி மர இலைகளால் பூஜை செய்யுங்கள்

வன்னி ஒரு புனிதமான தாவரமாகும். இதன் இலைகள் சிவன், சனி மற்றும் விநாயருக்கு சிறப்பாக அர்ப்பணிக்கப்படுகின்றன. அதுவும் விநாயகருக்கு வன்னி மர இலைகளால் பூஜை செய்தால், எல்லையற்ற புண்ணியமும், விநாயகரின் அருளும் என்றென்றும் நிலைத்திருக்கும். வன்னி மர இலைகளால் விநாயகரை வழிபடுபவர் வாழ்வில் தோல்வியை சந்திக்கமாட்டாராம். ராமர் ராவணனை வெல்வதற்கு விநாயகரை வன்னி மர இலைகளால் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

அட்சதை பயன்படுத்தவும்

நீங்கள் விநாயகரை விரைவில் மகிழ்ச்சியடைய செய்ய வேண்டுமானால், அவரை வழிபடும் போது பூஜையில் அட்சதையை பயன்படுத்துங்கள். அட்சதை என்பது உடைக்கப்படாத புனித அரிசி. அட்சதை இல்லாமல் கணபதி வழிபாடு முழுமையடையாது என்பது நம்பிக்கை. எனவே புதன்கிழமைகளில் விநாயகருக்கு பூஜை செய்யும் போது தவறாமல் அட்சதையைப் பயன்படுத்துங்கள்.