கோடீஸ்வரர் ஆகும் யோகம் ஜாதகத்தில் எப்படி இருக்கும்?

யார் தன் வாழ்க்கையில் செல்வந்தராகவும், சமூகத்தில் நல்ல மதிப்பு, மரியாதை கொண்ட நபராக திகழ்வார் என்பதை ஜோதிட சாஸ்திரத்தின்படி ஜாதகத்தில், இருக்கும் சில கிரக அமைப்புகள் மூலம் அறிய முடியும்.

அந்த வகையில் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு எப்படி இருந்தால் ஒருவருக்கு கோடீஸ்வர யோகம் ஏற்படும், ஒருவர் செல்வம், பொன், பொருள் வசதியுடன் வாழ்வார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடீஸ்வர யோகம் கொண்ட ஜாதகம்

ஒருவரின் ஜனன காலத்தில் எப்படிப்பட்ட கிரக சூழல் நிகழ்கிறதோ அதன் அடிப்படையில் தான் ஜாதகத்தில் கிரக அமைப்பு இருக்கும். அதுவே அவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும்.

ஒருவரின் விதி, அவர் எப்படி வாழ்க்கையில் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய நபராக இருப்பாரா இல்லை, மோசமான வாழ்க்கைச் சூழலில் சிக்கி இருப்பாரா, அவரின் செல்வ நிலை எப்படி இருக்கும். அவருக்கான வாழ்க்கையை நகர்த்த போராடுவாரா இல்லை, பலரின் வாழ்க்கைக்கான ஆதாரமாக திகழ்வாரா போன்ற விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நல்ல அனுபவமுள்ள ஜோதிடர்கள் எளிதாக கணித்துவிடுவது உண்டு.

அப்படி யார் ஒருவர் செல்வந்தராகவும், கோடீஸ்வர யோகம் கொண்டவராக இருப்பார் என்பதை, அவரின் ஜாதகத்தில் இருக்கும் சில கிரக அமைப்புகள் மூலம் எப்படி கணிக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

எல்லா துறைகளிலும் வெற்றி பெற வைக்கும் யோகம்


ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் தன ஸ்தானம் என அழைக்கப்படும் இரண்டாவது வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தால் அல்லது அவரது பார்வை சுபமாக இருந்தால், அந்த தன ஸ்தானம் சுபமானதாக கருதப்படுகிறது. அத்தகைய நபர் வாழ்க்கையில் ஒருபோதும் பணத் தட்டுப்பாட்டைச் சந்திப்பதில்லை, எல்லாத் துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்.

பணப்பிரச்சினை ஏற்படும் அமைப்பு


ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் புதன் கிரகம் அமைந்து சந்திரனின் பார்வை நன்றாக இல்லை என்றால், அது அசுபமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர் கடுமையாக உழைத்தாலும் வெற்றி பெறுவதில்லை. அதிக வருமானம் கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்த முடியாமலும், சேமிக்க முடியாமலும் போகக்கூடும். அத்துடன் பணம் சேர்ப்பதில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.

கடின உழைப்பால் நல்ல வெற்றி பெறும் அமைப்பு


ஒரு நபரின் ஜாதகத்தின் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது மிகவும் சிறப்பான அமைப்பாக கருதப்படுகிறது. அத்தகைய நபர் கடினமாக உழைத்து நல்ல வெற்றியைப் பெறம் வாய்ப்பு மற்றும் பொருள் வசதிகளை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பும் அமையும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் கடினமாக உழைத்தால், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவும்.

நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்பிருக்கும் அமைப்பு


ஜாதகத்தின் தன ஸ்தானமான என்று அழைக்கப்படக்கூடிய இரண்டாம் வீட்டில் பாவ கிரகம் அமைந்திருந்தால், அத்தகைய சூழ்நிலை அந்த நபருக்கு பெரும் இழப்பாக வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர் கடுமையாக உழைத்தாலும் நல்ல பலன்களைப் பெறுவதில்லை. தீய கிரகத்தின் காரணமாக, பணம் செலவழிக்கும் பழக்கம் ஒரு நபருக்கு ஏற்படுகிறது, இதன் காரணமாக ஒருவர் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

யாருக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை ?


ஒருவரின் ஜனன கால ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் சந்திரன் இருந்தால், அதன் மீது பலவீனமான புதன் பார்வை இருந்தால், அப்படிப்பட்ட சூழல் சாதகமானதாக இருக்காது. அப்படிப்பட்டவர் பல முறை கடின உழைப்பைப் போட்டாலும் அந்த செயலை முடிக்க முடியாமல் தள்ளிப்போவதும், அதிர்ஷ்டம் இல்லாததால் வெற்றி கிடைக்காமலும் போகலாம். மேலும், சில சமயங்களில் அவர்களால் குடும்பத்தின் செல்வமும் அழிக்கப்படும், அதாவது குடும்ப சொத்துக்கள் கரையும்.

யார் அதிக செலவு செய்வார்?


ஜாதகத்தில், சந்திரன் தனியாக அமர்ந்து, இரண்டாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டில் கிரகம் இல்லை என்றால், அது நபருக்கு அசுபமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்டவரிடம் அதிகப் பணம் சேர்ந்தாலும், சம்பாதித்ததைச் செலவு செய்து கொண்டே இருப்பார். அவரால் சேமிக்க முடியாமல் மீண்டும் மீண்டும் கடன் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

​பெரிய வெற்றியை பெற முடியாத கிரக அமைப்பு


ஒருவரின் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் சூரியனும், புதனும் அமர்ந்திருந்தால், அத்தகைய நிலை மிகவும் கவலைக்குரியது. அப்படிப்பட்டவர் கடினமாக உழைத்தால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும்.
சிறிது சோம்பேறியாக இருந்தாலும் அவர்கள் பணப்பற்றாக்குறையால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இவர்கள் யோசிக்காமல் எந்த ஒரு முதலீடும் செய்ய வேண்டாம்.