வீதியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி

வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் இன்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனிந்தும பிரதேசத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 56 வயதான தாய், 58 வயதான தந்தை மற்றும் 30, 26 வயதான இரண்டு மகன்களே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்களில் தாயும் ஒரு மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்