பாணின் விலை 1, 790 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்

அதித பணவீக்கம் என்ற நிலைமையானது மிகவும் பயங்கரமானது.

இதனால், அதிகரித்து வரும் நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக இருந்ததுடன் ஏப்ரல் மாதம் 30 வீதமாக அதிகரித்தது.

இந்த மாதம் 33.3 வீதமாக இருக்கின்றது.

மாதாந்தம் பணவீக்கமானது 30 வீதம் என்ற கணக்கில் அதிகரித்தால், 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் பொருளின் விலை டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 790 ரூபாக அதிகரிக்கும்.

இதனால், பாணின் விலை டிசம்பர் மாதத்தில் ஆயிரத்து 790 ரூபாவாக அதிகரிக்கும் என சுனில் ஜயரத்ன மேலு‌ம் கூறியுள்ளார்.