இலங்கையர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறிய யாழ்ப்பாணத்து தமிழர்

யாழ்.அளவெட்டி பகுதியில் இயற்கை முறையில் விவசாயம், இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் லோகநாதன் எனும் விவசாயி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.

யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகமும் இவருக்கு சிறந்த விவசாயி என்ற நாமத்தை வழங்கியுள்ளது.

இயற்கை எரிவாயு, இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி போன்ற பல முயற்சிகளில் ஈடுபடும் லோகநாதனை பற்றிய சிறு பார்வை இதோ,

அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த லோகநாதன் ஒரு சிறந்த விவசாயி,

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது சிறந்த முயற்சி ஊடாக இயற்கை முறையில் விவசாயத்தை வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்ட ஒரு சிறந்த தொழில் முயற்சியாளர் ஆவர்.

இயற்கை முறையில் கிடைக்கும் கழிவுகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இவரே தயாரிக்கின்றார். தனது சொந்த அனுபவத்தாலும் முயற்சியாலும் பல புதிய உத்திகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான உரத்தினை இயற்கை முறையில் இவர் தயாரிக்கின்றார்.

இயற்கை உரம் போலவே விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பூச்சிகளை விரட்டக் கூடிய பூச்சி நாசினிகளையும் இவர் இயற்கை முறையில் தயாரிக்கின்றார்.

தனது விவசாய தேவைக்குரிய சகலவற்றையும் எவ்வித செயற்கை இரசாயனத்தை நம்பி இருக்காமல் இயற்கை கழிவுகளை கொண்டு இயற்கை உரத்தினை தயாரித்து அதன் மூலம் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்கின்றார்.

காளான் உற்பத்தியினையும் இயற்கை முறையில் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார்.

அது போலவே தனது சொந்த வீட்டுத் தேவைக்குரிய எரிவாயுவையும் மிகவும் எழிமையான முறையில் இவரே தயாரித்து அதனைப் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக மாட்டு சாணத்தினை மட்டும் பயன்படுத்தி இதனை இவர் தயாரித்து பயன் பெறுகின்றார்.

தினமும் 8 Kg நிறையுடைய மாட்டு சாணத்தின் மூலம் நாள் ஒன்றிக்கு 5 மணத்தியாலங்களுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடிய இயற்கை எரிவாயுவை இவர் தயாரித்து தனது வீட்டில் பயன்படுத்தி வருகின்றார்.

மிகவும் எழிமையாகவும் சகலரும் பயன்படுத்தக் கூடிய முறையில் தனது சொந்த முயற்சியால் இதனை தயாரித்து பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் இவருக்கு வழங்கப்பட்ட வெறும் 10 Kg மஞ்சலினை இயற்கை முறையில் பயிரிட்டு அதனை 100 Kg அதிகமாகப் பயன் பெற்றுள்ளார்.

இவரது இந்த முயற்சி நமக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பதுடன் தற்காலத்தில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இவரின் முயற்சியை பின்பற்றி மிக எழிமையாகவும் இலகுவாகவும் பயன் பெறாலம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இயற்கை முறையில் தயாராகும் இந்த எரிவாயு 100 சதவீதம் பாதுகாப்பானது என்பதுடன் மிகக்குறைந்த செலவுடையதாகும்.