குரு மீன ராசியில் இருப்பதால், இந்த 4 ராசிக்காரங்க பணக்காரராக வாய்ப்பிருக்காம்.. உங்க ராசி இதுல இருக்கா?

மேஷம்

மீன ராசிக்கு செல்லும் குருவால், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பமாகிறது. உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். நல்ல காலமாக இருந்தாலும், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் சொத்து அல்லது நிலத்தின் மூலம் உங்களுக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைகளால் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.

ரிஷபம்

நிதியைப் பொறுத்தவரை, ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல பண வரவுடன் இருப்பார்கள். இக்காலத்தில் உங்களைத் தேடி அதிக பணம் வரக்கூடும். இது உங்கள் சொத்துக்களின் அளவை அதிகரிக்கும். இருப்பினும், சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

குரு மீன ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு வரவு இருந்தாலும், அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். நீங்கள் செல்வந்தர் ஆக விரும்பினால், தேவையற்ற செலவுகளில் கவனம் செலுத்தி, அதைக் கட்டுப்படுத்துங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது வருமானத்தையும், லாபத்தையும் அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனை தீர்வுக்கு வரும். உங்கள் அறிவு மற்றும் புத்திசாலித்தனம் உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். மேலும் பணிபுரிபவர்கள் நல்ல பதவி உயர்வையும் பெறலாம்.