வெள்ளிக்கிழமை பொது விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, இதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இருப்பினும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்தவாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.