இரு முகங்களுடன் பிறந்த அதிசயப் பூனைக்குட்டி திடீர் உயிரிழப்பு.!!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி உயிரிழந்துள்ளது.கடந்த 20 ஆம் திகதி இரவு ஒரு பூனைக்கு பிறந்த ஆறு பூனைக்குட்டி களில் இரு முகங்களுடன் பிறந்த பூனைக்குட்டியும் ஒன்றாகும். அதற்கு, இரண்டு மூக்கு, இரண்டு வாய், நான்கு கண்கள் இருந்ததால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி (Biscuits and Gravy) என இரு பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால் உரிமையாளர்கள் சுருக்கமாக பிஸ்கட்ஸ் என அழைத்தார்கள்.ஏதேனும் உணவு அளிக்கும்போது அது இரண்டு வாய்களையும் திறக்குமாம்.இந்நிலையில், அதன் பெயரில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்கை உரிமையாளர் (biscuits_andgravy) துவங்கினர்.பிறந்தபோது நல்ல உடல்நலத்தோடு அந்தப்பூனைக்குட்டி இருந்தாலும், இதன் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் என பலராலும் கூறப்பட்டது.இரண்டு முகங்களுடன் பிறந்த ஒரு பூனை ஜனஸ் பூனை என்று அழைக்கப்படுகிறது – இது ரோமானிய கடவுளான ஜனஸால் ஈர்க்கப்பட்ட பெயர், அவர் பெரும்பாலும் இரண்டு முகங்களைக் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.இந்த அரியவகை பூனைகள் வழக்கமாக ஒரு நாளுக்கு மேல் உயிர்வாழவில்லை என்றாலும், பிராங்க் மற்றும் லூயி என்ற இரண்டு முகம் கொண்ட பூனை 15 ஆண்டுகள் வாழ்ந்தது, 2006 இல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் பதியப்பட்டது.ஆனால்,உலகம் முழுவதும் உள்ள விலங்கு பிரியர்களின் இதயங்களை வென்ற பூனைக்குட்டி, பிறந்து மூன்று நாட்களான நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளது.