மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கத்திக் குத்து

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நோயாளர் விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் மீதே கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.