ஜூலை 15 முதல் உரம் வழங்க உத்தேசம்

ஜூலை 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிக்க முடியும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்..

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிவரும் கப்பல் ஜூன் 28ஆம் திகதி ஓமானில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த யூரியா உரக் கப்பல் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

உர செயலகம், வர்த்தக உர நிறுவனம் மற்றும் சிலோன் உர நிறுவனம் ஊடாக யூரியா இருப்பு கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.

நெல் மற்றும் சோளப்பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு பெரும் போகத்தில் உரங்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்