நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும்; தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை

நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அமைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இதுவரை எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், நாளை முதல் பாரிய மக்கள் வரிசை காணப்படும் என்றும் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.

இன்று முதல் 95 வீதமான மக்கள் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால் மண்ணெண்னைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.