யாருக்கு மறுபிறவி கிடையாது?

பொதுவாக மனிதர்கள் பல பிறவி எடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படியானால் மறுபிறவியில் இருந்து விடுபட வழியே இல்லையா? யாருக்கெல்லாம் மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.

இது குறித்த சில தகவல்கள் சாஸ்திரங்கள், கருட புராணம் போன்றவற்றில் உள்ளன. இந்தப் பதிவில் இது தொடர்பில் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு ஆத்மா இந்தப் பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்து கர்ம வினைகளையும் அனுபவித்து முடித்துவிட்டால் அந்த ஆத்மாவிற்கு மறுபிறவி ஏற்படாது.

தனக்கென எந்த ஒரு ஆசையும் இல்லாமல் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.

தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க, ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

இறைவனை மனதில் நிறுத்திக்கொண்டு, பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு எப்பொழுதும் இறைவனின் எண்ணத்தோடு வாழும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.

எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம்தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள்.

அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை தீர்த்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.

எமது சாஸ்திரத்தின்படி இவ்வுலகில் வாழும் அனைவரும் பிரமாத்மாவில் இருந்து வந்த ஜீவன்கள் தான். நிச்சயம் ஒருநாள் இந்த ஜீவன்கள் பரமாத்மாவை அடைந்தே தீர வேண்டும். அது ஒரு பிறவியிலும் நடக்கலாம் அல்லது ஓராயிரம் பிறவியிலும் நடக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரு நாள் அது நடக்கும்.