குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு பயனுள்ள ரகசியங்கள்

கர்ப்ப காலம் என்பது அனைத்து பெண்மணிகளுக்கும் மறு ஜென்மம் போன்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் கர்ப்பம் நன்றாக வயிற்றில் இருப்பதற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியம். அதனைப் பற்றியது தான் இந்தப் பதிவு. கரு வயிற்றில் தங்க, நன்றாக வளர்வதற்கும் இந்தப் பதிவு உதவியாக இருக்கும்.
கருத்தரிக்க உதவும் உணவுகள்

தினம் நாம் சாப்பிடுவது போல் கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடாது. எப்போதும் நமக்கு பிடித்ததை சாப்பிட்டு இருப்போம். ஆனால் கர்ப்ப காலத்தில் சாப்பாட்டுக்கேற்ற தனி அட்டவணை உள்ளது. அதனை பின் பற்றித்தான் ஒவ்வொரு பெண்மணிகளும் குழந்தைங்களை பெற்றெடுக்கின்றனர்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது உண்மையோ அதே போல் எந்த உணவை சாப்பிடக்கூடாதோ அதனை நிச்சியமாக தவிர்க்க வேண்டும் என்பதும் உண்மை.
முதலில் கர்ப்பம் வயிற்றில் தங்குவதற்கு நாம் என்ன சாப்பிட வேண்டும்

விட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். முக்கியமாக ஆப்பிள் ஒரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, வாழைப்பழம் இந்தப் பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கரு வயிற்றில் தங்கும்.
இரண்டாவது கீரை வகைகள்

சாப்பிட வேண்டும். கீரை என்றாலே அதில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பமாக உள்ளவர்கள் முருங்கை கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலுக்கு நன்கு இரும்புச் சத்துக்களை தரும்.
மூன்றாவதாக நட்ஸ் வகைகள்

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது. இதில் அதிகம் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் உள்ள சத்துக்கள் கருப்பைக்கு கருவை தாங்கும் சக்தியை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் அவகடோ, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நோய்களை எதிர்த்து போராடும் சத்துக்களை தரும்.
தவிர்க்க வேண்டியவை

எண்ணெய் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். சிப்ஸ், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு வளர்ச்சியில் கோளாறுகள் ஏற்படலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பேக்கரி தின்பண்டங்களை முற்றிலும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.